மார்ச் 13ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..

By Karthikeyan S
Mar 13, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். அச்சம் மறையும் நாள்.

ரிஷபம்: உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்: சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

கடகம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.

சிம்மம்: நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.  சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள்.

கன்னி: எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சற்று நிதானத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். சிரமம் மறையும் நாள்.

துலாம்: மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். 

விருச்சிகம்: மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

தனுசு: எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

மகரம்: பயனற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.

கும்பம்: வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். ஜெயம் நிறைந்த நாள்.

மீனம்: ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி நிதானமாக செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.

உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது! அப்படி செய்தால் என்ன நடக்கும்?