மே 08ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..

By Karthikeyan S
May 08, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நோய், கடன், எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்பு. காதல், குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். பொறுமை அவசியம். வியாபாரம் நன்றாக இருக்கும். 

ரிஷபம்: குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதல் விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். 

கடகம்: உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். மூக்கு, காது, தொண்டை தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

சிம்மம்: பேச்சில் கவனம் தேவை. நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

கன்னி: மனதில் படபடப்பு, அமைதியின்மை ஆகியவை காணப்படும். உடல் நலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்ப விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

துலாம்: அதிக செலவுகள் மனதை தொந்தரவு செய்யும். எந்த விஷயத்திலும் பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரம் ஓரளவு நன்றாக இருக்கும். மறைமுக தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள்.

விருச்சிகம்: வருமானம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். 

தனுசு: நீதிமன்ற வழக்குகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் மிதமானது. கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்  லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மகரம்: பயணத்தில் கஷ்டங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

கும்பம்: உணவு விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும்.

மீனம்: உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு:  இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.