இந்த ஆண்டு (2025) தமிழ் புத்தாண்டானது குரோதி ஆண்டில் இருந்து விசுவாவசுக்கு மாறுவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Apr 13, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ராகு பெயர்ச்சிகள் உங்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். தொழில் வளர்ச்சி சாதகமாக அமையும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரும். முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: மிதுன ராசியினருக்கு தொழில், கல்வி, நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். வெற்றிக்கான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது. ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம்.

சிம்மம்: தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுவரும். நிதி ஆதாயங்கள் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு கலவையான ஆண்டாக இருக்கும். தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். எதிர்பாராத பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தனுசு: நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இந்த புத்தாண்டு முதல் உருவாகும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு நிதானமும், பொறுமையும் தேவை. இந்த புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இந்த தமிழ் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஆதரவான உறவுகள் மூலம் ஊக்குவிக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்: தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப்போகிறது. சனி பகவானின் ஆதிக்கத்தால் நிதி சவால்கள் ஏற்படலாம்.

பொறுப்பு துறப்பு:  இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

கொங்கு நாட்டு ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?