உலக வரலாற்றில் முதன் முறையாக 70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை! வரலாற்றில் புதிய உச்சம்!

By Kathiravan V
Apr 12, 2025

Hindustan Times
Tamil

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 12) ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.70,160 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்ரல் 11) ஒரு சவரன் ரூ.69,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,745-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை இன்று (ஏப்ரல் 12) ஒரு கிராமிற்கு ஒரு ரூபாய் 2 உயர்ந்து ரூ.110.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை ஆகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது

சனி புதன் சேர்க்கை மூலம் ராஜ வாழ்கை பெறுகின்ற ராசிகள் 

Canva