அனைவருக்கும் பிடித்தமான ரோஜா பூ செடிகளை பராமரிப்பதற்கான சில எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 20, 2024
Hindustan Times Tamil
வீட்டில் தோட்டத்தில் தவறாமல் இடம் பிடிக்கும் செடியாக ரோஜா பூ இருந்து வருகிறது. பராமரிக்க மிகவும் எளிதான செடியாக இருந்து வரும் ரோஜா நறுமணம் மிக்கதாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் செடியாகவும் இருந்து வருகிறது
சரியான தொட்டியை தேர்வு செய்தல்
நடுத்தர அல்லது பெரிய தொட்டிகளில் ரோஜா பூ வைத்தால் நன்றாக வளரும். காற்றோட்டமான இடங்களில், வடிகட்டிய மண்ணில் செடியை வைக்க வேண்டும். இதன் வளர்ச்சியை மேம்படுத்த மண் உடன் கோகோபீட், ஆர்கானிக் சேர்மானங்களை சேர்க்கலாம்
நீர் ஊற்றுதல்
பனி காலத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு முறையும், கோடை காலத்தில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையும் ரோஜா பூ செடியில் நீர் பாய்ச்ச வேண்டும். அதிகமாக நீர் ஊற்றுவதை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்கள் அழுக்காகிவிடும்
வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்
ரோஜா பூ வளர்வதற்கு உகந்த வெப்பநிலையாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் உள்ளது. மிதமான ஈரப்பதத்தில் பூக்கள் பூக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. ஈரப்பதம் குறைவாக இருந்தால் ரோஜா பூ செடி இலைகள், தண்டுகள் மற்றும் மொட்டுகளில் சிறிது அளவு தண்ணீர் தெளிக்கலாம்
சூரிய ஒளி
முழு சூரிய ஒளியில் ரோஜா பூ செழித்து வளரும். வெளிப்புறங்களில் இதை வைக்கலாம். நேரடியாக சூரிய ஒளி பெற வாய்ப்பு இல்லாமல் இருந்தால் ஜன்னல் ஓரத்தில் வைக்கலாம். நன்கு பூத்து குலுங்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் குறைந்தது 6 மணி நேரமாவது ஒளி ரோஜாவுக்கு தேவைப்படும்
போதிய வசதியை ஏற்படுத்துவது
சில ரோஜா பூ செடிகள் 10 முதல் 12 அடி உயரம் வரைக்கூட வளரக்கூடும். காற்றின் வேகத்தால் ரோஜா தண்டுகள் எளிதில் உடைந்து, வளைந்து விடலாம். இதை தடுக்கும் விதமாக ரோஜா செடியை தாங்குவதற்கு ஒரு குச்சியை வைக்கலாம்
ஜனவரி 18ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..