ரிலேஷன்ஷிப்பில் பிரச்னை இல்லாமல் சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்

By Marimuthu M
May 05, 2025

Hindustan Times
Tamil

உங்கள் உணர்வுகள், தேவைகள், கவலைகள் அனைத்தையும் நேர்மையாகவும் அன்போடு பகிர்ந்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் பார்ட்னரின் மனநிலையை கேட்டு புரிந்து கொள்வது முக்கியம்.

நம் பார்ட்னர் யார் என்பதை மதித்து, அவர்களின் விருப்பங்கள், சுதந்திரம், மற்றும் தனி இடத்தை மதிக்க வேண்டும்.

பணிகள் அல்லது பிற பொறுப்புகள் எத்தனை இருந்தாலும், வாரத்திற்கு குறைந்தது சில மணி நேரங்களாவது ஒன்றாக செலவிடுங்கள்.

அவசியமற்ற விவாதங்களைத் தவிர்த்து, எந்தப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ளுங்கள்

லைஃப் பார்ட்னர் தவறு செய்தாலும், உடனே எதிர்வினையாற்றாமல், பொறுமையாக அணுகுங்கள்.

ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்க்கும் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அது உண்மையான உறவின் அடித்தளம்.

லைஃப் பார்ட்னரின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களின் சாதனைகளை பாராட்டுங்கள். பின்னால் நிமிரவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கட்டும்.

ரிலேசன்ஷிப்பில் இருந்தாலும், இருவருக்கும் தனித்துவமான ஆசைகள், கனவுகள் இருக்கலாம். அதைக் காப்பாற்ற ஊக்கமளியுங்கள்.

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!