குழந்தைப் பெற்றுக்கொள்ள உதவும் சூட்சமங்கள்!

By Marimuthu M
Jul 02, 2024

Hindustan Times
Tamil

பாலியல் உறவு வைத்ததும் எல்லோருக்கும் கரு உண்டாகி விடுவது இல்லை; அதற்கு என்று சில நாட்கள் உள்ளன. வாருங்கள் அறிவோம்.

ஒரு பெண்ணின் மாதவிடாய் 28ஆவது நாளில் இருந்து 30ஆவது நாளுக்குள் வந்துவிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். அதில் எளிதில் கரு நின்றுவிடும்

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் முடிந்து 12 முதல் 17 நாட்களில் கரு முட்டை வெளியேறும். இந்நாட்களில் ஆணின் விந்தணு கருமுட்டையுடன் சேரும்போது கரு தங்கும். 

 கருமுட்டை வெளியேறும் நாட்களை ஓவுலேஷன் நாட்கள் என்பர்

கருமுட்டையுடன் விந்தணு இணைந்தபிறகு, கர்ப்பப்பையை நோக்கிச் செல்ல 3 முதல் 4 நாட்கள் ஆகும். பின், இந்த முட்டை கருப்பையின் சுவரில் ஒட்டிக்கொள்ளும். 

அதன்பின், உடல் கருமுட்டையை வளர்க்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்து கர்ப்பம் உறுதியாகும்

பாலியல் உறவில் இருந்தபின், 6 நாட்களுக்கு அடுத்து பெண்ணின் கருவும், ஆணின் விந்தணுவும் ஃபாலோயின் டியூபில் ஒன்று சேர்ந்து கரு உருவாகும்

குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைக்கும் நபர்கள், மாதவிடாய் நின்று 12 - 17 நாட்களில், ஒருநாள் விட்டு ஒருநாள் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும்

 ஓவுலேஷன் அடிப்படையில், பாலியல் உறவு வைத்துக்கொண்ட பிறகு, 14 நாட்கள் காத்திருந்து, அதன்பின் பிரக்னன்ஸி கிட்களைப் பயன்படுத்தி, சிறுநீர் சோதனை செய்தால், கரு உருவாகியது தெரிந்துவிடும்

உடல் எடை குறைப்புக்கு சிறந்த ஸ்நாக்ஸ் சாய்ஸ் ஆக இருந்து வருகிறது அரிசி பொறி