முதலில் உங்களது வாழ்க்கைத் துணையை அடக்கி வைக்கவேண்டும் என நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வது படி தான், துணையும் நடக்கவேண்டும் என நினைப்பதும் தவறு. அது எமோஷனலாக உங்களோடு அட்டாச் ஆகாத நிலைக்குத் தள்ளிவிடும்.
எந்தவொரு விஷயத்தை வீட்டில் பகிரும்போதும், இல்வாழ்க்கைத் துணையின் பாஸிட்டிவ் பக்கங்களை மட்டும் அதிகம் பகிருங்கள். நெகட்டிவைப் பற்றி மிகுந்த நம்பிக்கையான நண்பர் அல்லது தோழியுடன் மட்டும் பகிர்ந்து ஆலோசனை கேளுங்கள்
காலையில் எழுந்ததும் உங்கள் இல்வாழ்க்கைத் துணையின் கண்களைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள். இரவு தூங்கும்போது ‘நன்றி’,
சொல்லுங்கள்.
நீங்கள் பார்த்து வியந்ததை, பார்த்து ரசித்த பறவை என சின்ன சின்ன சந்தோஷங்களைப் பகிர்ந்து
கொண்டால் உறவு வலுப்படும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை மதியுங்கள்
விளையாடுவது, ஊர் சுற்றுவது, டான்ஸ் ஆடுவது என எந்தவொரு பொழுது
போக்கையும் ஒன்றாக அனுபவியுங்கள். உறவு வலுப்படும்
உங்கள் இல்வாழ்க்கைத் துணைக்குப் பிடித்தமான தோற்றத்தை கடைபிடிப்பது, பிடித்த ஆடைகளை அணிவது கலவி நெருக்கத்தில் கூடுதல் உயவுப் பொருளாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கைத் துணையின் சின்ன சின்ன பணிகளைப் பாராட்டுங்கள். வாழ்க்கையில் நெருக்கம் கூடும்.
ஜனவரி 24ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..