மணி பிளாண்ட் வைத்திருப்பவர்கள் அதை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 02, 2024

Hindustan Times
Tamil

மிகவும் எளிதாக வளர்க்ககூடிய இந்த செடியானது குறைவான பராமரிப்பை கொண்டதாக உள்ளது. இதை ஆரோக்கியமாக வைக்க செடிகளுக்கான ஒவ்வொரு தேவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்

மண்

நன்கு வடிகட்டிய மற்றும் ஈரமான மண்ணில் செழித்து வளரும் தன்மை கொண்டது மணி பிளாண்ட். இயற்கையாக மண்ணை உரமாக்குவதற்கு சிறிது கரி மண் கலக்க வேண்டும். இது தாவரத்தின் வேர்கள் அழுகுவதையும் நீர் தேங்குவதையும் தவிர்க்கும்

நீர் பாய்ச்சுதல்

மணி பிளாண்டுக்கு குறைவான தண்ணீரே போதுமானது. மண் மேற்பரப்பில் வறண்ட பகுதிகளில் நீர் தெளிக்கவோ அல்லது பாய்ச்சவோ வேண்டும். குளிர் காலத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை மட்டும் நீர் பாய்ச்சினால் போதும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்

தண்ணீரிலும் மணி பிளாண்டை வளர வைக்கலாம்

ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி அதன் மணி பிளாண்டை வைத்தாலும் நன்கு வளரும். இவ்வாறு செய்யும்போது வாரம் ஒரு முறை தண்ணீரை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இதனால் பூஞ்சை நோய் பாதிப்பு தடுக்கப்படும்

சூரிய ஒளி உள்வாங்குதல்

உள்புறம், வெளிப்புறம் என இரண்டு பகுதிகளிலும் இந்த செடி நன்கு வளரும்.  போதுமான அளவு சூரிய ஒளி உள்வாங்குவதன் மூலம் அதன் இருப்புதன்மையும் நிலைத்த இருக்கும். நேரடியாக சூரிய ஒளி இதன் மீது படுவதை தவிர்க்க வேண்டும். எனவே ஜன்னல் அருகே லேசாக ஒளி படுமாறு வைக்க வேண்டும்

தழைகளை நிர்வகித்தல்

மணி பிளாண்ட் வளர்ச்சியை மேம்படுத்த தழைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். செடி வளர்வதற்கு போதுமான இடமும் தர வேண்டும்

தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!