நீண்ட நாள் திருமண பந்தத்துக்கு உதவும் குறிப்புகள்!

By Marimuthu M
Mar 14, 2024

Hindustan Times
Tamil

நம் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நாம் தான் காரணம் என முதலில் உணருங்கள்.  பிறர் காரணம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

கணவன் - மனைவி இடையே சின்னஞ்சிறு சண்டைகள் வந்தாலும் பேசாமல் இருக்காதீர்கள். சண்டை போட்டதை மறந்துவிட்டு, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேச்சினைத் தொடங்குங்கள்.

கணவன் - மனைவி இருவருமே ஒருவரது பணிகளில் மற்றவர் உதவி செய்ய வேண்டும்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப் பணம் முக்கியம். கணவன் - மனைவி இடையே செய்யப்படும் தேவையற்ற செலவு, ஆடம்பரச் செலவு பிரச்னையை உண்டாக்கும்

 திருமண உறவில் ஆணோ பெண்ணோ ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்

ரிலேஷன்ஷிப்பில் கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தி, அமைதியாக இருந்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும். 

திருமணப் பந்தத்தில் ஒருவரது கருத்தினை இன்னொருவர் மதிக்க வேண்டும். பிடிவாதமாக இருக்கக் கூடாது. கொஞ்சமாவது வளைந்து நெளிந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

திருமணப் பந்தத்தில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். 

ஆர்சிபிக்கு எதிராக எஸ்ஆர்எச் வலுவான அணி