குழந்தைகள் இயல்பாகவும், எளிதாகவும் பழகி கொள்ளும் பழக்கங்களில் ஒன்றாக கை விரல்களில் வாயில் வைத்து கைசூப்பும் பழக்கம் இருந்து வருகிறது
By Muthu Vinayagam Kosalairaman Jan 26, 2025
Hindustan Times Tamil
குறிப்பாக தூங்கும்போது கட்டை விரலை வாயில் வைத்து சுப்பியவாறு தூங்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கு உள்ளது
குழந்தைகள் ஒரு வயதை நெருங்கும்போது தொடங்கும் இந்த பழக்கமானது 4 வயது வரையிலும் தொடர்கிறது
பற்கள் வளர்வது வரை கைவிரல்களை குழந்தைகள் சூப்பவது பெரிய பிரச்னை இல்லை ஆனாலும் நீண்ட நேரம் பற்களை சூப்புவது அண்ணம் மற்றும் பற்களின் சீரமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்
பொதுவகை விரல் சூப்பும் பழக்கம் 3 வயதில் குழந்தைகள் தானாகவே நிறுத்திவிடும் என மருத்துவ நிபணர்கள் கூறிகிறார்கள். சில குழந்தைகள் 5 வயது வரை இந்த பழக்கம் தொடரும்பட்சத்தில் மருத்துவ கவனிப்பு தேவைப்படும்
குழந்தைகளுக்கு இருக்கும் கைச்சூப்பும் பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிகளை பின்பற்றலாம்
குழந்தைகள் கைசூப்பும் நேரத்தில் ஏதேனும் விரும்பிய உணவுகளை சாப்பிட கொடுப்பது, பாராட்டுவது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் மெல்ல பழக்கம் குறையும்
எந்த நேரத்தில் குழந்தைகள் கைசூப்புகிறார்கள் என்பதை கவனித்து, அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு இருக்கும் பிரச்னையை தீர்க்க முயற்சிக்கவும்
கைசூப்பும் குழந்தைகளின் கவனத்தை ஈர்ககும் விதமாக அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யலாம். இந்த நேரத்தில் அவர்கள் திட்டவோ, அதட்டவோ கூடாது. மாறாக அவர்களுக்கு ஏதாவது வேடிக்கை காட்டலாம்
கைசூப்பம் குழந்தைகளின் விரல்களில் கசப்பு பொருள்களை தடவுவது, பேண்டேஜ் செய்வது போன்றவற்றை செய்யலாம்
சில குழந்தைகள் என்ன செய்தாலும் கைசூப்பும் பழக்கத்தை விடாமலும் இருக்கலாம். அந்த குழந்தைகளுக்கு ரொம்ப அழுத்தம் கொடுத்தால் இந்த பழக்கத்தை விடாமல் தொடரவும் வாய்ப்பு உள்ளது