உறவினர்களிடம் சொல்லவே கூடாத விஷயங்கள்

By Marimuthu M
Feb 02, 2024

Hindustan Times
Tamil

உறவினர்களிடம் உங்களது நிதிநிலையை சொல்லவே கூடாது. சொன்னால், பொறாமை அல்லது ஏளனப் பார்வையைப் பெறுவீர்கள்

உங்களது பிரச்னைகளை அடிக்கடி உறவினர்களிடம் சொல்லாதீர்கள். அது உங்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும்.

உடல் நிலைப் பிரச்னைகளை உறவினர்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் உதவாதபோது உறவுக்குள் சிக்கல் வரலாம்.

இல்லறத் துணையுடன் போடும் சண்டைகளை வெளியில் சொல்லாதீர்கள். அது உங்கள் மீதான பார்வையை தவறாக நினைக்கத் தோன்றும்.

உங்களது திருமணம் குறித்த பெண் மற்றும் மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்வுகளை அனைத்து உறவினர்களிடமும் சொல்லாதீர்கள். அதை அவர்கள் கெடுத்துவிட வாய்ப்புண்டு. 

உங்களது இலட்சியங்களை வெளியில் சொல்லாதீர்கள். அது வெளியில் தெரியும்போது உறவினர்கள் அதைக் கெடுக்கலாம்.

நம் மீது பொறாமை எண்ணம்கொண்ட உறவினர்களிடம் நம் சொத்து மதிப்பினை சொல்லவே கூடாது. தேவையில்லாத வில்லங்கங்களை உருவாக்கி விடுவார்கள்.

இவனுக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்வா என நினைக்கும் உறவினர்களை திருமணத்திற்குக் கூட அழைக்காதீர்கள்

சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!