திருமணத்துக்கு முன்பே பார்ட்னரிடம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

By Marimuthu M
Mar 15, 2024

Hindustan Times
Tamil

திருமண உறவில் நுழையப் போகிறீர்கள் என்றால் உங்கள் துணையின் ஆசைகளைத் தெரிந்து கொள்வது முக்கியம்

திருமண உறவில் நுழையப் போகிறீர்கள் என்றால், தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த விஷயங்களைப் பேசிக்கொள்வது பிரதானம். இது அவரவர் இலக்குகளை அடைய உதவும். 

திருமண உறவில் எத்தகைய வேலை செய்கிறார் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்திவிட வேண்டும். சிலருக்கு வீட்டிலேயே வேலை, சிலருக்கு ஒவ்வொரு ஊராக ஊர்சுற்றும் வேலை ஆகியவற்றை சொல்லி புரிய வைக்கவேண்டும்.

வொர்க் -லைஃப் பேலன்ஸில் இருக்கும் பிரச்னைகளையும் வருங்காலத் துணையிடம் தெரிவித்து விடுங்கள். 

இரு குடும்பத்தின் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தாம்பத்திய உறவில் நுழைவதற்கு முன் முன்கூட்டியே தெரிந்துகொள்வது பிரதானம்.

திருமணத்துக்கு முன், ஆணும் பெண்ணும் வருவாய் சார்ந்த விஷயங்களை, பணத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து பேசிக்கொள்ளுதல் முக்கியம். இது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். 

 திருமணம் என்பது மனது சார்ந்த விஷயம். திருமணத்துக்கு முன்பே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்