வீட்டடி மனை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

By Marimuthu M
Mar 03, 2024

Hindustan Times
Tamil

மனையை வாங்கும்போது அசல் தாய்ப் பத்திரம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

30 வருடங்களுக்கு வில்லங்கச் சான்றிதழைப் பெற்று, யாரிடமிருந்து யாருக்கு சொத்து மாறியது என்பதைப் பார்க்கவேண்டும்

வீட்டடி மனை வாங்கும்போது டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ அங்கீகாரம் உள்ளதா என்பதைப் பார்க்கவேண்டும்

வீட்டடி மனைகள், பட்டா மனைகளாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

பழைய வீட்டடி மனை வாங்கும்போது வில்லங்கமில்லாத சொத்தா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்

சொத்துக்கு நிலவரி கட்டப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்

வீடு, கல்விசாலைகள், வணிக வளாகங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டுமான விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு மனை உள்ளதா என்பதைப் பார்த்துக் கொள்வது அவசியம்

பெருமளவில் சொத்து வாங்கப் போகிறோம் என்றால் வழக்கறிஞரிடம் நிலம் தொடர்பாக சரிபார்த்துவிட்டுத்தான் முடிவுஎடுக்கலாம்.

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!