கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை. 

By Suguna Devi P
Dec 03, 2024

Hindustan Times
Tamil

திருவண்ணாமலை  தீபம் எற்ற்றிய பின் சரியாக 6:30 மணிக்கு நாம் வீடுகளில் விளக்கை ஏற்ற வேண்டும்.

வீட்டில் இருக்கும் உடையாத, சேதமடையாத பழைய அகல் விளக்குகளை தாரளமாக பயன்படுத்தலாம். 

விளக்கேறுவதற்கு நெய், நல்லெண்ணெய் மற்றும் பஞ்ச தீப எண்ணெய் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

நாம் வீடுகளில் குறைந்தது 25 முதல் 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 

முதலில் வீட்டு வாசலில் விளக்கை ஏற்றி பின்னர் அதனை வீட்டிற்குள் வந்து வைக்க வேண்டும். பூஜை அறையில் ஏற்றி வெளியே எடுத்து செல்லக் கூடாது. 

=வீட்டு வாசலில் ஏற்றிய விளக்குகள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை எரிய விட வேண்டும். அதுவே போதுமானது. 

வீட்டின் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். இது வீட்டின்னுள் லட்சுமி பிரவேசத்தை உறுதி செய்யும். 

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.