ரிலேஷன்ஷிப்பில் பிரச்னை இருக்கும்போது செய்ய வேண்டியவை

By Marimuthu M
Jan 07, 2024

Hindustan Times
Tamil

ரிலேஷன்ஷிப் பிரச்னையில் இணையரிடம் அதிகமாக குறைகளைக் கண்டுபிடிக்க தோன்றும். அப்போது எதிர்மறையாக சிந்திப்பதை விட்டுவிடுங்கள்

தனிமையில் ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். அது நல்லநேர்மறை சிந்தனைகளை உண்டுசெய்யும்.

எதிர்மறை எண்ணங்கள் உருவாகும்போது அவை எந்தச் சூழ்நிலையில் தோன்றியது என பகுத்தறிந்து, இனி அப்படி ஒரு சூழலை எப்படி சமாளிக்கலாம் என யோசியுங்கள்

ரிலேஷன்ஷிப்பில் தற்காலிகமாகப் பிரிந்து இருக்கையில் நாம் தோல்வி அடைந்தோம் எனப் பொருள் அல்ல. மாறாக தீர்வுகளை காண முயல வேண்டும்.

ரிலேஷன்ஷிப்பில் என்ன தான் நாம் சக துணைமீது வீண் பழியைப் போட்டாலும் சுயமாக நம் மீதான விமர்சனங்களை அறிந்துகொள்வது நல்லது.

ரிலேஷன்ஷிப்பில் தற்காலிகப் பிரிவின் போது எந்தவொரு சூழலிலும் போதைப் பழக்கத்தை கையில் எடுக்காதீர்கள். 

நீங்கள் விரும்பும் நபரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்

ரிலேஷன்ஷிப்பில் தற்காலிகப் பிரிவின்போது உடனடியாக பழைய காதலியுடன் பேசவோ, ஒரு புதிய உறவில் நுழையவோ நினைக்காதீர்கள். 

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்