பழைய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை?

By Marimuthu M
Apr 26, 2024

Hindustan Times
Tamil

வீடு என்னென்ன மெட்டீரியல் கொண்டு கட்டப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்

வீடு கற்களை அடுக்கி ஃபவுண்டேஷன் போடப்பட்டதா, இல்லை, கான்கிரீட் பூட்டிங், காலம், பீம் வைத்து கட்டப்பட்டதா  என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

பழைய வீடு இருக்கும் இடத்தின் நில மதிப்பினை ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். 

 பழைய வீடு வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை பெற்று வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைப் பொறுத்து வாங்க வேண்டும். 

பழைய தனி வீட்டை ஒரு சிவில் இன்ஜினியரை வைத்து மதிப்பீடு செய்து நாம் அதிகமாக கொடுக்கிறோமா, இல்லையா என்பதைப் பரிசோதித்து வாங்குங்கள். 

பழைய வீட்டை வாங்கும்போது, அதனை மறுபடியும் விற்பனை செய்தால் நமக்கு அது லாபம் தருமா என்பதையும் யோசித்து வாங்க வேண்டும். 

சொரியாஸிஸை குணப்படுத்த உதவும் காய் கோவைக்காய்