டென்ஷனில் இல்லறத்
துணையுடன் இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லாதீர்கள்!
By Marimuthu M Feb 11, 2024
Hindustan Times Tamil
'குழந்தைகளுக்காகதான் நான் உன்னோடு வாழ்றேன்' என்கிற வார்த்தை, நமது துணை நம்மிடம் ஈர்ப்பில் இல்லாமல் இருப்பதாக உணரவைக்கும்.
'நான் உன்னை நம்பவே மாட்டேன்' என்னும் வார்த்தையை சொல்லாதீர்கள். நம்பிக்கை எதிர்பார்ப்பது வாழ்க்கையல்ல, கொடுப்பது தான்.
‘நீங்கள் எதுவுமே எனக்கு செய்யவில்லை’
என்னும் வார்த்தையை உபயோகிக்காதீர்கள். எதிர்பார்த்து ரிலேஷன்ஷிப்பில் இருப்பதுபோல் தோன்றும்.
'நீ ரொம்ப பழைய ஆளாக இருக்கிறீர்கள்' என்ற வார்த்தையைச் சொல்லாதீர்கள். அது எதிர்தரப்பினை மனதளவில் தாழ்வுபடுத்தும்.
'எங்க வீட்டில் ஏன் தான் இப்ப திருமணம் பண்ணி
வைச்சோமுன்னு வருத்தப்படுறாங்க’- இந்த வார்த்தை தாம்பத்திய உறவைப் பாதிக்கும்.
‘எங்க ஃப்ரெண்ட் வீட்டில் அப்படி செய்யுறாங்க’ என கம்பேர் செய்யாதீர்கள். அது தேவையற்ற எரிச்சலை உண்டாக்கும்.
'என் வீட்டில் இருந்ததில் ஒரு பங்கு கூட நான் உன் கூட சந்தோஷமா இல்லை’எனும் வார்த்தை தவறானது. இந்த ஒப்பீடு எதிர்பாலினத்தை காயப்படுத்தும்.
நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய கடந்த கால உறவுகள் குறித்து பொதுவெளியில் பெரிதாக எதுவும் பேசிக்கொண்டது கிடையாது. இன்ஸ்டாவில் பார்ட்னருடன் போட்டோ மற்றும் வீடியோ போடுவதுடன் நிறுத்திக்கொண்டார்.