குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நன்மை கொடுக்கும் கிரகமாக இருந்தாலும் அவரின் இடமாற்றத்தை பொறுத்து சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்

By Aarthi Balaji
May 14, 2025

Hindustan Times
Tamil

 குரு பகவான் இன்று (மே 14) ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் மூன்று ராசிக்கு நன்மை ஏற்படுத்த போகிறதாம். 

ரிஷபம்: இந்த ராசிக்கு செல்வ வீடான இரண்டாம் வீட்டில் குரு பிரவேசிப்பது வருமானத்தை பெருமளவில் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வேலையில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூட உங்கள் ஆலோசனையால் பலர் பயனடைவார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்

துலாம்: இந்த ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குருவின் பிரவேசம் அடைவது பல வழிகளில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு நனவாகும். சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்படும். பிரபலங்களுடன் நெருக்கமான உறவு உருவாகும். பேச்சுத்திறன் அதிகரிக்கிறது

சிம்மம்: இந்த ராசிக்கு குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். அனைத்து நிதி சிக்கல்களும் தீர்க்கப்படும். வேலையில் சம்பளம், சலுகைகள் மற்றும் தொழில் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல திருமண உறவு அமையும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்