அரிசியிலிருந்து செய்து சாப்பிடக்கூடிய பாராம்பரிய இனிப்பு பலகாரங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 24, 2024

Hindustan Times
Tamil

அரிசி இந்தியாவில் முக்கிய உணவாக இருப்பதோடு இதை வைத்து பல்வேறு வகையான உணவுகளும் தயார் செய்யப்படுகிறது. அரிசியை வைத்து செய்யப்பட்டு பாரம்பரிய இனிப்பு பழகாரங்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்

அரிசி, பால், சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு செய்யப்படும் மிகவும் பிரபலமான இந்திய இனிப்பாக அரிச பாயசம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பாக உள்ளது

அரிசி மாவில், தேங்காய், வெல்லம் சேர்த்து வேக வைக்கும் இனிப்பு கொழுக்கட்டை. கடலோர கர்நாடகா பகுதிகளில் பிரபலமான இந்த பலகாரம் நாகபஞ்சமி அன்று தயாரிக்கப்படுகிறது

அரிசி மாவு, நெய், கோவா, உலர் பழங்கள் மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றால் தயார் செய்யக்கூடிய அரிசி பர்பி

அரிசி மாவில் நெய், ர்க்கரை அல்லது சர்க்கரை பாகு, ஏலக்காய் தூள், உலர் பழங்கள் சேர்த்து அவற்றை மிதமான வெப்பத்தில் கிண்டி அரிசி அல்வா தயார் செய்யப்படுகிறது

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான இனிப்பு உணவாக அரிசு பொங்கல் இருக்கிறது. பச்சரிசியுடன், வெல்லம், முந்திரி, ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து இந்த இனிப்பு உணவு தயாரிக்கப்படுகிறது

அரிசி மாவு, தேங்காய், நெய், பேரீச்சம்பழம், வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு பெங்காலி இனிப்பு சிற்றுண்டியாக உள்ளது

அரிசி மாவு, வெல்லம், நெய் மற்றும் சோம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அரிசி லட்டு தயார் செய்யப்படுகிறது. இது வட இந்தியாவில் மிகவும் பிரபலம்

குழந்தைகளின் இதய ஆரோக்கிய உணவுகள்