அஜித்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாமலோ அல்லது பாதியிலே நிறுத்தப்பட்ட சில முக்கிய படங்கள் எவையெல்லாம் தெரியுமா?

By Muthu Vinayagam Kosalairaman
Feb 05, 2025

Hindustan Times
Tamil

கோலிவுட் சினிமாவில் டாப் நடிகராக இருந்து அஜித்குமார் இந்த படங்களில் நடித்திருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி கூட ஆகியிருக்கலாம்

அஜித்குமார் நடிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட முதல் படமாக சாருமதி இருந்து வருகிறது. தேவா இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்கள் கூட வெளியாகியிருந்தது. ஆனாலும் படம் அறியாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது

அஜித்குமார் முதன் முதலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படம் மகா. இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கிய அடுத்த சில நாள்களில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. சில நாள் ஓய்வுக்கு பின்னர் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றபோதிலும் தீராத வலி காரணமாக ஷுட்டிங்கை தொடர முடியாமல் போனது. இந்த படமும் கிடப்பில் போடப்பட்டது

அஜித்குமார் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் காங்கேயன் என்ற படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்கான காரணமும் அறியப்படவில்லை

சிட்டிசன் வெற்றிக்கு பிறகு அஜித்குமார் - ஷரவண சுப்பையா ஆகியோர் இதிகாசம் என்ற படத்தில் இணைவதாக இருந்தனர். வரலாற்று படமாக உருவாகும் என தகவல்கள் உலா வந்த நிலையில் அறியப்படாத காரணங்களால் கைவிடப்பட்டது

அஜித்குமார் புதிய ரிலீஸாக விடாமுயற்சி படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. கடந்த 2023 பொங்கல் வெளியீடான துணிவு படத்துக்கு பிறகு ஓராண்டு கழித்து விடாமுயற்சி படம் வெளியாகிறது 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் குட் பேட் அக்லி என்ற மற்றொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதியில் வெளியாகிறது

கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்