உங்கள் குழந்தைகளை நேர்வழிப்படுத்த இந்த நேர்மறையான வழிகள் உதவும்!
By Priyadarshini R May 11, 2025
Hindustan Times Tamil
உங்கள் குழந்தைகளையும் உங்களுடன் சேர்ந்து பிரச்னைகளை தீர்ப்பதில் ஈடுபடுத்துங்கள். இது அவர்களிடம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கொடுக்கும்.
அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். அதன் வளர்சியைப் பாராட்டுங்கள். அந்த விஷயத்தில் நீ கடுமையான பணியை மேற்கொண்டாய் என அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு வழக்கங்களை ஏற்படுத்துங்கள். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கவேண்டும். இரவு சரியான நேரத்தில் உறங்கச் செல்லவேண்டும். பாடம் படிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், திரை நேரம் என அனைத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க சிறந்த வழி அவர்களுக்கு எடுத்துக்காட்டாவதுதான். அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேப்போல் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும்.
தெளிவான எல்லைகளை வகுப்பதன் மூலம் அவர்களின் கடிவாளங்களை தளர்த்துங்கள். நல்ல உரையாடலை நடத்துங்கள். அவர்களுக்கு தேர்வுகளைக் கொடுங்கள்.
சுதந்திரம் மற்றும் ஒத்துழைப்பு இரண்டையும் கொடுக்கும் தேர்வுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அது அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது.
குழந்தைகள் என்ன தேர்ந்தெடுக்கிறார்களோ அதன் இயற்கையான விளைவுகளை அவர்கள் பார்க்கப்படும். அவர்கள் சில குறிப்பிட்ட டாஸ்குகளை செய்ய விரும்பவில்லையென்றால், அவர்கள் சில பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.
நீங்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றால், உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இந்த 5 பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள்