2008இல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பண மழை பொழியும் இந்த லீக்கில் தொடக்கம் முதல் தற்போது வரை சில வீரர்கள் விளையாடி வருகிறார்கள்
By Muthu Vinayagam Kosalairaman Mar 24, 2025
Hindustan Times Tamil
ஐபிஎல் போட்டிரகளில் 18 சீசன்களிலும் விளையாடி வரும் வீரர்கள் யார், எந்த அணிகளில் விளையாடியுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்
ஐபிஎல் 2008 தொடங்கியதுபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வரும் எம்எஸ் தோனி தற்போது வரை அதே அணியில் தொடர்கிறார். சிஎஸ்கேவுக்காக 16வது சீசனில் விளையாடுகிறார்
சிஎஸ்கே அணி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலகட்டமான 2016, 2017 சீசனில் எம்எஸ் தோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்
ஐபிஎல் தொடங்கிய 2008இல் ராயல் சேலஞர்ஸ் அணிக்காக விளையாடிய கோலி தற்போது அதே அணியில் 18வது சீசனில் களமிறங்கியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணிக்காக அனைத்து சீசன்களிலும் விளையாடியே ஒரே வீரர் என்ற தனித்துவ சாதனையை புரிந்தவராக உள்ளார் கோலி
ஐபிஎல் 2008 சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் தனது பயணத்தை தொடங்கினார் ரோஹித் ஷர்மா. இவரது அணி 2009இல் ஐபிஎல் கோப்பை வென்றது
2011 முதல் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட வருகிறார் ரோஹித் ஷர்மா. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்
ஐபிஎல் 2008 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா அறிமுகமானார். அதன் பிறகு 2011 சீசனில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாடினார்
2012 சீசன் முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஜடேஜா. சிஎஸ்கே அணி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2016, 2017 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அஜிங்கியா ரஹானே, அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்
ஐபிஎல் போட்டிகளில் சீனியர் வீரராக இருந்து வரும் அஜிங்கியா ரஹானே தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக உள்ளார்
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?