குளிர்காலத்தில் மலச்சிக்கலால் அவதியா இந்த பழங்கள் போதுமே!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 04, 2024

Hindustan Times
Tamil

 ஆப்பிளில் க்வெர்செடின், பெக்டின் ஆகிய தாதுக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் சி,வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் குளிர்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் தடுக்க முடியும்.

pixa bay

பெர்ரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதனால் குளிர்கால மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை அதிகமுள்ளதால் உடலில் இருக்கும் செல் சேதங்களைப் பாதுகாக்கின்றன. பெர்ரியில் இருக்கும் ஆன்டி வைரல் எதிர்ப்பு நோய்த்தொற்றைத்தவிர்க்க உதவும்.

pixa bay

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகளவில் உள்ளன. வைட்டமின் சி ஆக்ஸினேற்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.  நார்ச்சத்தின் காரணமாக குளிர்கால மலச்சிக்கல் நீங்குகிறது.

pixa bay

 மாதுளைப் பழத்தில் வைட்டமின் பி, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளிர்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. .

pixa bay

நெல்லியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் காலைக்கடன் சிக்கலை எளிதில் தீர்க்கின்றன.

pixa bay

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் , வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவை குழந்தைகளின் புத்திக்கூர்மையை அதிகரிக்கின்றன. இந்த கிவி பழத்தை ஜூஸாக்கி குடித்தால் மலச்சிக்கல் நீங்குகிறது.

pixa bay

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்