கேது பகவான் சிம்ம ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 23, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களில் முக்கிய கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானுக்கு என சொந்த ராசி கிடையாது.
Canva
நிழல் கிரகமாக விளங்கினாலும் கேது பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் கேது பகவான் சிம்ம ராசிக்கு சொல்கின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும்.
Canva
கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு கேது பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல பலன்கள் உங்களை தேடி வரும் எனக் கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் அனைத்து யோகங்களும் உங்களை தேடி வரும்.
Canva
கடக ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு கேது பகவான் வரப்போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல நிதி ஆதாரங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள்