குரு புதன் அம்சத்தால் லாப திருஷ்டி யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
May 09, 2025

Hindustan Times
Tamil

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். நவக்கிரகங்கள் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது இவர் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

Canva

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

Canva

இந்நிலையில் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி அன்று குரு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் 60 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர். இவர்களின் சுப பார்வை சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மேஷ ராசி: குரு புதன் அம்சத்தால் உருவான லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: குரு புதன் அம்சத்தால் உருவான லாபத் திருஷ்டி யோகம் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

மகர ராசி: குரு புதன் லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.