மூளை செயல்பாட்டின் சக்தியை அதிகரிக்க உதவும் விதை வகைகள் எவை என்பதை பார்க்கலாம் 

By Muthu Vinayagam Kosalairaman
Aug 23, 2024

Hindustan Times
Tamil

தாவரம் சார்ந்த கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்ததாக விதைகள் இருக்கின்றன

விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இது அதிகம் நிறைந்துள்ளன

ஆல்பா லினோலெனிக் அமிலம், ஒமேகா கொழுப்பு 3 அமிலம் நிறைந்து இருக்கும் ஆளி விதைகள் மூளை ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளித்து வீக்கத்தை குறைக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் இருக்கும் சியா விதைகள் ஒட்டு மொத்த மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது

துத்தநாகம் நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக உள்ளது. பூசணி விதைகளில் இது அதிகம் நிரம்பியுள்ளது. அதேபோல் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மெக்னீசியம், இரும்பு, தாமிரம், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன

சூரிய காந்தி விதையில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் ஈ ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு மூளை செல்களை பாதுகாக்கிறது

வைட்டமின் ஈ, லிக்னான்ஸ் இடம்பிடித்திருக்கும் எள்ளு விதைகள் மூளை செயல்பாட்டை ஆதரிக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் சீரகத்தில் அதிகம் நிரம்பியிருப்பதால் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்துக்கு ஆதரவு தருகிறது

நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!