பூக்கள் பூப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் அரிய வகை செடிகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 08, 2023
Hindustan Times Tamil
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பூக்கும் நீலகுறிஞ்சிப் பூ
மிகவும் அழகான பூக்களாக இருந்து வரும் நீலகுறிஞ்சி நீலிகரி மற்றும் பழனி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது
அழிந்து வரும் பூக்கள் இனமாக இருந்து வரும் ஆண்டிஸ் அரசி
இந்த செடிகளில் 80 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்ககூடியதாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த காலத்தில் ஒரேயொரு முறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன
டைட்டன் ஆரம், கார்ப்ஸ் பூ என்று அழைக்கப்படும் பிண மலர்
உலகின் மிகப் பெரிய பூ ஆக இருந்து வரும் இந்த பூ செடி நடப்பட்ட பின்னர் 7 முதல் 10 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கிறது. இதுவும் அழிந்து வரும் பூ இனமாக இருப்பதுடன், இதன் நறுமணம் இறந்த சடலம் அல்லது இறைச்சி போன்று இருக்கும்
மிகப் பெரிய இமாலய லில்லி மலர்கள்
வெள்ளை மற்றும் பர்பிள் நிறத்துடன் டிரம்பெட் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த பூ 10 அடி உயர செடிகளில் பூக்கிறது. இமயமலை பகுதியில் 4 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது
நீலக்கத்தாழை, கருங்கற்றாழை என்று அழைக்கப்படும் ஏகேவ் பூக்கள்
அரிய வகை பூக்களாக இருந்து வரும் இது மெக்சிகோ, அமெரிக்கா பகுதிகளில் வளர்கிறதுச. செடி நடப்பட்ட பின்னர் 80 ஆண்டுகள் கழித்தே பூக்கள் பூக்கின்றன