கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்  உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

By Muthu Vinayagam Kosalairaman
Apr 21, 2025

Hindustan Times
Tamil

வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் அதிகம் நிரம்பியிருக்கும் நெல்லிக்காய் ஜூஸ், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தலை முடி வேர்களை வலுப்படுத்தி, முடி நரைப்பை தடுக்கிறது

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை நிரம்பியிருக்கும் கேரட் ஜூஸ், உச்சந்தலையின் ஆரோக்கியத்துக்கும், வலுவான, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது

வெள்ளரிக்காய் நீரேற்றத்துக்கு உதவுகிறது. அதே வேளையில், இரும்புச்சத்து நிறைந்த கீரைகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதுடன், முடி உதிர்தலையும், முடி உடைதலையும் தடுக்கிறது

அதிகப்படியான ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் நிறைந்திருக்கும் பீட்ரூட் ஜூஸ்,   உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியமான நுண்ணறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

கற்றாழை மற்றும் புதினா சேர்ந்த இந்த குளிர்ச்சியூட்டும் கலவை உச்சந்தலையை குளிர்விக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் முடி மீளுருவாக்கத்துக்கு தேவையான நொதிகள் மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது

நீர்ச்சத்து மிக்க பானமாக இருந்து வரும் சுரைக்காய் ஜூஸில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நீரேற்றமாக வைத்திருப்பதுடன், வேர்களை வலுப்படுத்தவும் முடி உதிர்தலைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்

தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) ஆராய்ச்சியின் படி, இந்த ஜூஸ்களில் முடி வளர்ச்சியை ஆதரிக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!