பற்களை சொத்தையாவதற்கு காரணமாக இருக்கும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 27, 2024

Hindustan Times
Tamil

பற்களில் துவாரங்கள் அல்லது பல் சொத்தை என்றும் அழைக்கப்படும் பல் சிதைவு, பாக்டீரியா, உணவு, அமிலம் மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றின் கலவையால் ஏற்படுகிறது

சில உணவுகள் பற்களின் எனாமலை பலவீனப்படுத்தி பற்களை அழிக்கிறது. உணவுகள் பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பாக்டீரியாவோடு வினைபுரிந்து பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது

பதப்படுத்தப்பட்ட வெள்ளி பிரட்களில் அதிகப்படியான சர்க்கரை, ஸ்டார்ட்ச் இருக்கும். இவை ஈறுகளில் ஒட்டிக்கொண்டு பற்சிதைவை ஏற்படுத்துகின்றன

பால், சீஸ், ஐஸ்க்ரீம் போன்ற போன்ற பால் சார்ந்த பொருள்கள் சர்க்கரை மற்றும் அமிலங்களின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. எனவே பால் சார்ந்த உணவுகள் சாப்பிட்ட பின் பல்துலக்குவது பல் சிதைவு பாதிப்பில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக உள்ளது

மார்கெட்டில் கிடைக்கும் சாஸ் வகைகளில் இயல்பாகவே சர்க்கரை, அமில அளவு அதிகமாக இருக்கும். இவை பற்களின் எனாமலுக்கு பாதிப்பை உண்டாக்கும்

சிப்ஸ்களில் ஸ்டார்ச் இடம்பிடித்துள்ளன. இவை பற்களுக்கு இடையில் சிக்கி கொள்வதன் விளைவாக பாக்டீரியா உருவாக்கத்துக்கு வழி வகுத்து பல் சிதைவை ஏற்படுத்தும்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பெர்ரி பழங்களிலும் அதிகப்படியான அமிலங்கள் உள்ளன. இவை எனாமலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன

’ஆட்டம் ஆரம்பம்! பணத்தால் மிரள வைக்க போகும் மேஷம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!

’ஆட்டம் ஆரம்பம்! பணத்தால் மிரள வைக்க போகும் மேஷம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!