கோடை காலத்தில் நாவல் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 25, 2025
Hindustan Times Tamil
ஜாமூன் என்று அழைக்கப்படும் நாவல் பழங்கள் ஊட்டச்சத்துகளின் பவர்ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள
டைப் 2 டயபிடிஸ் நோய் பாதிப்பை நிர்வகிக்கும் சேர்மங்களான ஜாஸ்மோசின், ஆன்டிமெலின் ஆகியவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் நாவல் பழங்கள் வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது
நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நாவல் பழத்தில் அதிகமாக உள்ளது. இவை பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சியை தடுக்கிறது
நாவல் பழத்தில் இருக்கும் பாலிபினால்கள்
மூளை ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய நரம்பு பாதுகாப்பு நன்மைகளாக திகழ்கின்றன. நாவல் சாறு மத்திய நரம்பு மண்டலத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது
நாவல் பழ சாறில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன. இவை வீக்கத்தை குறைத்து, திசுக்கள் சேதமடைவதை தடுக்கிறது
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்
டாக்சிகளில் பயணிக்கும் பெண்கள். இந்த பாதுகாப்பு குறிப்புகளை மறந்துவிடாதீர்கள்!