சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!
By Priyadarshini R Apr 13, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்
மாங்காய் – 1
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 4
கடுகு – கால் ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 மில்லி லிட்டர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மாங்காயை பெரியதும் அல்லாமல் சிறியதும் அல்லாமல் நடுத்தர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். இதை உப்பில் ஊறவைத்து எடுத்து 3 நாட்கள் வெளியிலில் உலர்த்த வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் வெந்தயம் மற்றும் மிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இவை பொன்னிறமானவுடன், இறக்கி ஆறவைத்து ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை காய்ந்துள்ள மாங்காய்களில் சேர்த்து நன்றாக குலுக்கி வைக்கவேண்டும்.
எஞ்சிய நல்லெண்ணெயை ஒரு கடாயில் சேர்த்து அது சூடானவுடன் கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் மஞ்சள் பொடியை சேர்த்து உடனே இறக்கி இந்த மாங்காயில் ஊற்றி ஊறவிடவேண்டும்.
இதை பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கி, வெள்ளைத் துணிபோட்டு மூடி வெயிலில் தினமும் காய வைக்கவேண்டும்.
இது ஊறஊறத்தான் சுவை அதிகம் கொடுக்கும். நன்றாக ஓரிரு நாட்கள் வெயிலில் உலர்த்தி ஊறவிட்டு சாப்பிட்டால் சூப்பர் சுவையான வெந்தய மாங்காய் ஊறுகாய் தயார்.
சீசனில் இதை செய்துவைத்துக்கொண்டு கோடையைக் கொண்டாடுங்கள்.
உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!