கேது பகவான் ஞானகாரகன் என அழைக்கப்படுகிறார். தன்னை தானே அறிந்து கொண்டு உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதற்கு பெயர்தான் ஞானம் என்பதாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 3, 6, 10, 11ஆம் இடங்களில் கேது பகவான் இருந்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கேதுவை பொறுத்தவரை பிற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பது நல்லது. வேறு கிரகங்களுடன் கேது இணைந்து இருந்தால் அந்த கிரகத்தின் காரகத்துவங்களை தன்வயப்படுத்தி அதனை கேது தடுத்துவிடுவார் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
முதலாம் வீடான லக்னத்தில் கேது இருந்தால் ஜாதகர் முகராசி வாய்ந்தவராக இருப்பார். இவர்களுக்கு ஞானத்தின் மீது ஈடுபாடு இருக்கும். திறமைசாலிகளாக இருக்கும் இவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். ஆனாலும் எதிலும் பற்று இல்லத மனப்பான்மை இவர்களுக்கு உண்டு.
இரண்டாம் வீட்டில் கேது இருந்தால், கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆக்ரோஷமாக பேசும் தன்மை கொண்டவர்கள். குடும்பத்தில் பற்று இருக்காது, வேற்று மதத்தினரிடம் நட்பு பாராட்டுவார்கள்.
மூன்றாம் வீட்டில் கேது இருந்தால், இளைய சகோதரரால் நன்மை இல்லை. முன்கோபம் அதிகம் இருக்கும். நல்ல தைரியசாலிகளாக இவர்கள் இருப்பார்கள், எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு.
நான்காம் வீட்டில் கேது இருந்தால், ஜாதகருக்கு சுகத்தின் மீது நாட்டம் இருக்காது. கல்வி பயில்வதில் பிரச்னைகள் இருக்கும். ஆனால் மந்திர, தந்திரம், ஜோதிடம், மருந்து விவகாரங்களில் ஆர்வம் உண்டு. கடுமையாக உழைக்க தயாராக இருப்பார்கள்.
ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் யாரையும் நம்பமாட்டார்கள். அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
6ஆம் வீட்டில் கேது இருந்தால், கடன், பிணி உள்ளிட்ட தொல்லைகள் இருக்காது. இவர்களை எதிர்க்கும் எதிரிகள் வீழ்வார்கள். விரும்பும் சுகம் விரும்பும் நேரத்தில் கிடைக்கும்.
7ஆம் வீட்டில் கேது இருந்தால், திருமணம் தாமதம் ஆகலாம். ஒரு சிலருக்கு வாழ்கை துணை உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
8ஆம் வீட்டில் கேது இருந்தால், ரகசியம் காப்பவராக இருப்பார்கள். சில தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.
9ஆம் இடத்தில் கேது இருந்தால் தந்தை உடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்காமல் போகும். உறவுகளுடன் பகை ஏற்படலாம்.
10ஆம் வீட்டில் கேது இருந்தால் தொழிலில் நாட்டம் இருக்காது. ஆனால் தொழில் செய்ய ஆர்வம் கொண்டால் மிகப்பெரிய இடத்தை அடையலாம்.
11ஆம் வீட்டில் கேது இருந்தால், திடீர் லாபங்கள் கிடைக்கும். ஞானம் அதிகம் இருக்கும். தன வந்தர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு மது, மாதுக்களில் அதிக ஈடுபாடு இருக்கும்.
12ஆம் வீட்டில் கேது இருந்தால், தன்னை தானே மறக்க கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்கையில் எதை பற்றியும் இவர்களுக்கு கவலை இருக்காது. ஆன்மீக விவகாரங்கள், சமூக பணிகளில் ஈடுபாடு இருக்கும்.
பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்ட பழம் இலந்தைப்பழம் இருந்து வருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்