ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சோளத்தின் நன்மைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 10, 2024

Hindustan Times
Tamil

சோளத்தில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அதன் சில நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

pixa bay

குளூட்டன் என்பது கோதுமை மற்றும் பார்லியில் உள்ள புரதச்சத்து. இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால் வயிறு உப்புசம், வலி மற்றும் பொருமல் ஆகியவை ஏற்படுகிறது. சோளம் குளூட்டன் இல்லாத முழுதானியம்.

pixa bay

பார்லி அல்லது அரிசியைவிட சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து எடுத்துக்கொள்வதால், உடல் பருமன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவை ஏற்படுவது குறைகிறது.

pixa bay

சோளத்தில் நிறைய மாவுச்சத்தும் உள்ளது. அதனால் இது செரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு காக்கப்படுகிறது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. எடை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு நல்ல தேர்வாகும்.

pixa bay

100 கிராம் சோளத்தில் 11 கிராம் புரதம் உள்ளது. அது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. செல்கள் புதிதாக தோன்ற உதவுகிறது.

pixa bay

ஒரு கப் சோளத்தில் 8.45 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துடன் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை வழங்குகிறது.

pixa bay

இதில் மெக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள கால்சிய அளவை பராமரிக்கிறது. (மெக்னீசிய சத்துக்கள் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது)

pixa bay

சோளத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த செல்களை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அனீமியா ஏற்படுவதை தடுக்கிறது.

pixa bay

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?