தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!

By Pandeeswari Gurusamy
Dec 17, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிளில் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்தானது நமது உணவு நன்றாக ஜீரணம் ஆவதற்கும், மலச்சிக்கலை தடுப்பதற்கும் பேருதவி செய்கிறது.

இந்த நார்ச்சத்தானது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.

ஆப்பிளில் அதிகளவு தண்ணீர் சத்து இருக்கிறது. ஆகையால் இது நல்ல  நீரேற்றியாகவும் செயல்படுகிறது.

டைப் 2 சர்க்கரை வியாதி வருவதை தடுப்பதில் முக்கிய பங்காற்று கிறது.

ஆப்பிளில் உள்ள போரான் நமது எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

ஆப்பிள் சாப்பிடும் போது நமக்கு திருப்தியான தன்மை கிடைக்கும். இது நமது எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.

ஆப்பிளில் இருக்கும் குவெர்செடின் நிறமி மற்றும் வைட்டமின் சி ஆனது நாள்பட்ட நோய்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸூடன் போராடுவதற்கு பயன்படுகிறது.

All photos: Pixabay

பாதவெடிப்பு சரிசெய்ய 5 வழிகள்