அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை
By Divya Sekar
Nov 20, 2024
Hindustan Times
Tamil
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி,(23),
இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன், (30). என்பவரும், ரமணியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணி வீட்டில் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்
ரமணியும் காதலை விட்டதால் ஆத்திரமடைந்த மதன் வகுப்பறைக்குள் புகுந்த ரமணியை குத்தியுள்ளார்.
ரமணி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் மதன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்'
மலச்சிக்கல்
க்ளிக் செய்யவும்