நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
By Kalyani Pandiyan S Aug 22, 2024
Hindustan Times Tamil
முதல் மாநாடு எப்போது? ஆம், நம்முடைய முதல் மாநில மாநாட்டிற்கான அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கு எப்போது நடக்கும் உள்ளிட்ட விவரங்களை நான் கூடிய சீக்கிரமே அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
புயலுக்குப் பின் அமைதி புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் என்பது போல, நம்முடைய கொடிக்குப் பின்னரும் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. அந்த வரலாற்றுக் குறிப்பை நாம் நடத்த இருக்கும் மாநாட்டில் நான் விளக்கிச் சொல்கிறேன். அந்த மாநாட்டில் நம்முடைய கொள்கைகள் என்ன, நம்முடைய செயல் திட்டங்கள் என்ன உள்ளிட்டவை குறித்தும் நான் அறிவிப்பேன். அதுவரைக்கும் சந்தோஷமாக, கெத்தாக நாம் இதை ஏற்றி கொண்டாடுவோம்.
இதை நான் ஒரு கட்சி கொடியாக மட்டும் பார்க்கவில்லை. நாம் இதை தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான ஒரு கொடியாக பார்க்கிறேன்.
இதை உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் நான் சொல்லாமலேயே நீங்கள் ஏற்றுவீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
இருப்பினும் அதற்கான முறையான அனுமதி அனைத்தையும் வாங்கிவிட்டு, விதிமுறைகளை பின்பற்றி அனைவரிடமும் தோழமை பாராட்டி, இதை நாம் ஏற்றிக் கொண்டாடுவோம்.
அதுவரைக்கும் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்” என்று பேசினார்.
ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்