தைப்பூசம் என்பது தை மாதத்தில் கொண்டாடப்படும் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் அன்னை பார்வதி முருகனுக்கு வேல் வழங்கிய நாள் என கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக  வரும் சிறப்பும் இதில் உள்ளது.

Pixabay

By Suguna Devi P
Feb 09, 2025

Hindustan Times
Tamil

தமிழ் கடவுள் முருகனின்  அறுபடை வீடுகளிலும் இந்த தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச நாள் வரும் பிப்ரவரி 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக இந்த அறுபடை வீடுகளும் கொண்டாட்டத்திற்கு தயாராக உள்ளன.

Pixabay

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மற்றும் சுவாமிமலை ஆகிய அறுபடை வீடுகளில் விசேஷ விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன இந்த விழாவிற்காக பல பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கமான ஒன்றாகும்

Pixabay

தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்காவடி குத்தியும் அழகு தூக்கியும் வந்து முருகனை வழிபட்டு அவனது அருளை பெறுவார்கள். 

கோயில் சென்று முருகனை வழிபட முடியவில்லை என்றால், தைப்பூச நாளில் வீட்டிலிருந்தே விரதம் இருந்தும் முருகனை வழிபாடு செய்யலாம்.

நீண்ட நாளாக தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை, குழந்தை இல்லாமல் அவதிப்படுபவர்கள் மற்றும் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் முருகனை வேண்டி தைப்பூசை விரதத்தை மேற்கொள்ளலாம்.

தைப்பூச விரத நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலேயே பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும் இந்த விரதத்தில் எதுவும் சாப்பிடாமலும் இருக்கலாம். அல்லது வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பால் பழம் மட்டும் சாப்பிட்டு கூட விரதத்தை மேற்கொள்ளலாம். 

ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருந்தும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.விரதத்தை முடிக்கும் போது கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட வேண்டும்.

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva