ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயருடன் களமிறங்கிய இந்த அணி 2021இல் பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

By Muthu Vinayagam Kosalairaman
Mar 30, 2023

Hindustan Times
Tamil

பீரித்தி ஜிந்தா இணை உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இதுவரை 10 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர்

இந்த சீசனில் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்

2022 சீசனில் மயங்க் அகர்வால் இருந்தார்

2020, 2021 சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்

2018, 2019 சீசனில் ஸ்பின் பெளலரான ரவிச்சந்திரன் கேப்டனாக பொறுப்பு வகித்தார்

2017இல் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கிளென் மேக்வெல் கேப்டனாக பெறுப்பேற்றார்

2016 சீசனில் சிஎஸ்கே முன்னாள் வீரர் முரளி விஜய் கேப்டனாக செயல்பட்டார்

2014, 2015 சீசன்களில் ஆஸ்திரேலியா கேப்டன் ஜார்ஜ் பெய்லி கேப்டனாக செயல்பட்டார்

2011 முதல் 2013 வரை மூன்று சீசன்களுக்கு ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாக செயல்பட்டார்

2010இல் இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமாரா சங்ககாரா கேப்டனாக செயல்பட்டார்

2008, 2009 சீசனில் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அணியின் கேப்டனாக செயல்பட்டார்

பூசணி விதைகளில் இருக்கும் நன்மைகள்