அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!
By Priyadarshini R May 12, 2025
Hindustan Times Tamil
வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை என்ற இவரின் வாசகம், இந்த உலகம் முழுவதும் நமது நண்பர்கள் என்பதைக் குறிக்கிறது.
நம் அனைவரின் திறமையும் ஒரே மாதிரியானது கிடையாது. ஆனால் நமக்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள சமமான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கனவு காணுங்கள், அவை சிந்தனைகளாகின்றன, சிந்தனைகள் செயலாகிறது என்று கூறுகிறார்.
வெற்றிக் கதைகளை மட்டும் படிக்காதீர்கள், உங்களுக்கு அதில் இருந்து வெறும் கருத்து மட்டுமே கிடைக்கும். தோல்வி கதைகளையும் படியுங்கள். அதில் இருந்து நீங்கள் வெற்றிக்கான சில யோசனைகளைப் பெற முடியும்.
உங்களின் கனவுகள் நிஜமாவதற்கு முன் நீங்கள் கனவு காண வேண்டும். இது குழந்தைகள், தங்களின் சிறப்பான எதிர்காலம் குறித்து கற்பனை செய்வதை நிறுத்தக் கூடாது என்பதைக் குறிக்கிறது.
நீங்கள் தோற்றுப்போனாலும், துவண்டு போகாதீர்கள், ஏனெனில், தோல்வி என்பது, கற்றலின் முதல் படி, அது முடிவல்ல என்று கலாம் குறிப்பிடுகிறார்.
நீங்கள் மிகவும் சிறப்பாக ஒரு காரியத்தை செய்வது என்பது எதிர்பாராதவிதமாக நடந்துவிடாது. அது தொடர்ந்து நீங்கள் முயல்வதன் விளைவாகும்.
நீங்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றால், உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இந்த 5 பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள்