கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் சிறப்பாக இருக்க உதவும் நுட்பங்கள் பற்றி அறிவோமா?
By Marimuthu M
Mar 21, 2025
Hindustan Times
Tamil
வாழ்க்கைத்துணை பேசும்போது காதுகொடுத்து கவனித்து, அவர்களின் இடத்தில் இருந்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒருவர் மீது ஒருவர் இரக்கத்துடனும், ஒருவர் கருத்துகளுக்கு ஒருவர் மதிப்பளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இது ரிலேஷன்ஷிப்பை வலுப்படுத்தும்.
ஒருவர் செய்த தவறுகளின்போது கூசாமல் மன்னிப்புக் கேட்டு திருத்திக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துசெல்லுங்கள்.
தொழில், வாழ்க்கையில் சவாலான காலங்களில் ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் கொடுத்தும் நம்பிக்கை பாராட்டவும் செய்ய வேண்டும்.
வாழ்க்கைத்துணையின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்ய முயன்றாலே போதும். செய்ய முயற்சித்து கிடைக்கவில்லை என்றாலும் வாழ்வு சிறக்கும்.
ஒருவரது உடல் மற்றும் மன ரீதியான தேவைகளை அறிந்துகொண்டு, பேசி அதனை ஆரோக்கியமாகப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
ஒருவருக்கு ஒருவர் ரிலேசன்ஷிப்பில் நேர்மையாக உண்மையாக இருங்கள். அப்படி இருப்பதை துணைக்குப் புரியவையுங்கள்.
எளிமையான வெயிலுக்கு உகந்த மோர்க் குழம்பு செய்முறை எப்படி என தெரியுமா?
க்ளிக் செய்யவும்