சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்றை பெரும்பாலான மக்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வீட்டில் வளமும், நலமும் செழிக்க இறைவனை வழிபடுவார்கள்.
By Suguna Devi P Apr 14, 2025
Hindustan Times Tamil
இந்த ஆண்டு விசுவாச வருடம் என வழங்கப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஏப்ரல் 14, 2025 அன்று பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டிற்கு பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாம் வீட்டில் எப்படி புத்தாண்டு வழிபாடு செய்வது என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதல் பகுதியே வீட்டினை முழுவதும் சுத்தம் செய்து வைக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் உள்ள பழைய பூக்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
புத்தாண்டு அன்று விநாயகரை வழிபட்டால் சகல வளமும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. உங்கள் வீட்டில் விநாயகர் சிலையோ, புகைபடமோ இருந்தால் மலர் வைத்து பூஜை செய்யுங்கள்.
வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதனை சுத்தம் செய்து சுற்றி மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும். வீட்டில் தூய்மை சக்தி நிலை பெற இதனை செய்யவும்.
பூஜையறையில் ஒரு கலசம் நிரம்பும் வரை அரிசி மற்றும் ஒரு படி நிரம்பும் வரை தண்ணீர் வைத்து கடவுளை வழிபட வேண்டும். கலசம் நிரம்பியதை போல வீட்டில் மகிழ்ச்சியும் நிரம்பும்.
வீட்டில் இருக்கும் பூஜை சாமான்களுக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். இவை இரண்டும் மங்கலத்தின் அடையாளம் ஆகும்.
பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கினை ஏற்றி வழிபட வேண்டும். 5 முக விளக்கினை ஏற்றினால் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்