தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்! அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது தெரியுமா?

By Kathiravan V
Jan 06, 2025

Hindustan Times
Tamil

01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2025-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (06.01.2025) வெளியிடப்பட்டு உள்ளது. 

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,11,74,027; பெண் வாக்காளர்கள் 3,24,29,803 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 9,120 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,45,184 ;  பெண்கள் 3,45,645 ;  மூன்றாம் பாலினத்தவர் 129) உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,43,839 ;  பெண்கள் 2,47,153;  மூன்றாம் பாலினத்தவர் 151).

, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,505 ஆவர். (ஆண்கள் 86,456; பெண்கள் 90,045; மூன்றாம்  பாலினத்தவர் 4). 

இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,980 ஆவர் (ஆண்கள் 92,615 ; பெண்கள் 86,296 ; மூன்றாம் பாலினத்தவர் 69).

Parenting Tips : தேர்வில் முதலிடம்; எப்போதும் சிறப்பிடம்; குழந்தைகளிடம் கூறவேண்டிய பாசிட்டிவ் விஷயங்கள் என்ன?