இந்த படிப்பில் சேர்ந்த மாசம் 750 ரூபாய் உதவித் தொகை! எல்லாமே இலவசம்! அதிரவிடும் தமிழக அரசு! இதோ விவரம்!
By Kathiravan V Jul 12, 2024
Hindustan Times Tamil
தமிழ்நாட்டில் ஐடிஐ படிப்பில் சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சிநிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதளகலந்தாய்வு 28.06.2024 உடன் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி 8-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான காலஅவகாசம் 01.07.2024 முதல் 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது.
தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 16.07.2024 முதல் 31.7.2024 வரை மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சிநிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவுசெய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லாமிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லாபயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.