Kadi Joke : 'கல கல கலவென சிரி' ஸ்.. ப்பா.. முடியல.. எங்க இருந்துடா வர்றீங்க..?

Pixabay

By Pandeeswari Gurusamy
Mar 04, 2025

Hindustan Times
Tamil

இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாசகர்களுக்கு இன்றைய நாளுக்கான கடி ஜோக்குகள் இதோ. கொஞ்சம் மொக்கை தான், இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ணி படிங்க, சிரிங்க! சரி வாங்க.. ‘கடி’க்கலாம்!

Pixabay

டாக்டர்: ஸாரிப்பா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன், உன் கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு நோயாளி: பொய் சொல்லாதீங்க டாக்டர்.. நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்ல.. அது எப்படி ஃபெயில் ஆகும்?

‘ஸ்.. ப்பா.. முடியல..’

Pixabay

‘ரொம்ப உக்கிரமா இருக்கான்’

நண்பன் 1: நேற்று தியேட்டர்ல ஏ-ரோல இருந்தேன் படமே தெரியலடா! நண்பன் 2: முன்னடி பி-ரோல் இருந்ததுடா!

Pixabay

‘நீ பொழச்சுப்பப்பா’

ஆசிரியர்: ரஷ்யாவில் ஏன் கொசுவே இல்ல.. யாராச்சு சொல்லுங்க? மாணவன்: சார்.. அங்கே கொசுவுக்கு வேறு பெயர் சார்!

Pixabay

‘ஆனாலும் ரொம்ப குசும்பு’

ஆசிரியர்: காபியை பார்த்து டீ கவலை பட்டுச்சாம் ஏன்? மாணவன்: அது ‘மணமான’ காபி சார்!

Pixabay

‘ஓ.. அப்படி வர்றீக..’

வாடிக்கையாளர் 1: ஏன் இந்த பாலைவன போஸ்ட் ஆபிஸில், ஸ்டாம்ப் வாங்கிட்டு, எல்லாரும் வெளியே போறாங்க? வாடிக்கையாளர் 2: வெளியே தான் ‘ஒட்ட-கம்’ இருக்கு!

Pexels

‘பயங்கரமான ஆளா இருப்பாரோ..’

பக்கத்துவீட்டுக்காரர் 1: ஆமா.. அவர் ஏன், மாடி மேல சந்தனம் பூசிட்டு இருக்காரு? பக்கத்து வீட்டுக்காரர் 2: அது மொட்டை மாடியாம்ங்க.. அதான் சந்தனம் பூசிட்டு இருக்காரு!

Pexels

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock