Kadi Joke : கொஞ்சம் மொக்கை தானுங்க.. வேணுமா பாருங்க

Pixabay

By Pandeeswari Gurusamy
Feb 27, 2025

Hindustan Times
Tamil

இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாசகர்களுக்கு இன்றைய நாளுக்கான கடி ஜோக்குகள் இதோ. கொஞ்சம் மொக்கை தான், இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ணி படிங்க, சிரிங்க! சரி வாங்க.. ‘கடி’க்கலாம்!

Pixabay

ஆசிரியர்: ஏன்டா.. நாய் படம் வரைஞ்சியே, அது வாயை வரையாம விட்டுட்ட..! மாணவன்: சார்.. அது வாயில்லா ஜீவன் சார்!

‘நீ ஒரு ஆர்டிஸ்ட்ல’

Pixabay

அம்மா: டேய்.. ஏன் பன்னுல தண்ணீ ஊத்திட்டு இருக்க? மகன்: நீங்க தானே பன்னீர் கேட்டீங்க!

‘ரொம்ப டெக்னிக்கா போறான்’

Pixabay

வாடிக்கையாளர்: எந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டும்? கடைக்காரர்: அது காட்டாது, நாம தான் பார்த்துக்கணும்!

‘அந்த கோட்டை தாண்டி நானும் வர மாட்டேன்’

Pixabay

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கிய மாதம் எது? மாணவன்: ம்… கொசு இல்லாத மாதம் சார்!

‘இது அது தான..’

Pexels

அப்பா: ஏன் அந்த பொண்ணு கூட பேசிட்டு இருக்க? மகன்: கீ தொலைஞ்சு போச்சுப்பா அதான் அவள்ட்ட கேட்டுட்டு இருந்தேன். அப்பா: அவளிடம் எதற்கு கேட்குற? மகன்: அவள் பெயர் தான், ‘கீ’தா

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே’

Pexels

நோயாளி: டாக்டர் டாக்டர்.. என்னை நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எந்த இடத்துலப்பா? நோயாளி: அந்த முட்டு சந்து பக்கத்துல டாக்டர்!

‘முட்டு சந்து முதல் தெரு’

Pexels

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock