47 வயதில் அப்பா.. சந்தோஷம் பொங்க பொங்க குழந்தையை கையில் தூக்கிய ரெடின் கிங்ஸ்லி! வைரலாகும் போட்டோ..
By Malavica Natarajan Apr 03, 2025
Hindustan Times Tamil
இயக்குநர் நெல்சனின் வித்தியாசமான காமெடி கதாப்பாத்திரமாக மாறி ஏராளமான ரசிகர்கள் பிடித்து தமிழ் சினிமாவின் முக்கிய காமெடியனாக மாறி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
தற்போது 47 வயதாகும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த 2023ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பினும் இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை நல்ல புரிதலுடன் தொடங்க ஆரம்பித்தனர்.
இந்த சமயத்தில் தான் ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி வீட்டில் குழந்தை சத்தம் கேட்கப் போவதாக கடந்த ஆண்டு முதலே தகவல்கள் பரவத் தொடங்கின.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன் நட்சத்திர பட்டாளங்கள் சூழ இந்தத் தம்பதிக்கு வளைகாப்பு நடந்தது.
இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் வைரலான நிலையில், ரெடின்- சங்கீதா தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ரெடின்- சங்கீதா தம்பதிக்கு அழகிய இளவரசி (பெண் குழந்தை) பிறந்துள்ளதாக போட்டோ வெளியிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துள்ளனர்.
நீங்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றால், உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இந்த 5 பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள்