கோடை வெயிலில் நீச்சல் குளம் செல்லும் முன் இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!
Pixabay
By Pandeeswari Gurusamy Apr 15, 2025
Hindustan Times Tamil
கோடை வெயில் யாருக்கும் சோர்வாக இருக்கும். இதிலிருந்து விடுபட பல வழிகள் தேடுகிறோம். அதில் நீச்சல் ஒன்று.
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க நீச்சல் ஒரு வழி மட்டுமல்ல, இது ஒரு ஆரோக்கியமான பழக்கமும் கூட.
தொடர்ந்து வேலைப் பளுவால் அவதிப்படுபவர்களுக்கு நீச்சல் அடிப்பது ஒரு சிறந்த சிகிச்சை. நீரில் நேரம் செலவிடுவதால் மனம் இலகுவாகிறது.
ஆனால் கோடை காலத்தில் நீச்சல் அடிப்பவர்கள் சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் மிகவும் தீவிரமாக இருக்கும். இந்த நேரத்தில் நீச்சல் அடிக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
நீச்சல் குளம் சுத்தமாக இருக்க வேண்டும். நீரில் போதுமான அளவு குளோரின் இல்லாவிட்டால் தோல் பிரச்சனைகள் வரும். தோலில் சொறி, ஒவ்வாமை ஏற்படலாம்.
நீச்சலுக்கு செல்லும் போது நிறைய தண்ணீர் குடிப்பதை மறந்துவிடாதீர்கள். நீர்ச்சத்து குறைபாட்டிலிருந்து தப்பிக்கலாம்.
பலருக்கும் நீச்சல் குளத்திலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Pexels
சனி கோடி கோடியா கொட்டணுமா.. தோஷங்கள் நீங்க இந்த சின்ன பரிகாரத்தை ட்ரை பண்ணுங்க!