இனிப்பும், காரமும் கலந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேப்லா; குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டிஃபன் ரெசிபி!

By Priyadarshini R
Mar 26, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள்  சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோல் நீக்கி மசித்தது)  பச்சை மிளகாய் – 1  ஓமம் – கால் ஸ்பூன்  மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்  உப்பு – தேவையான அளவு  மல்லித்தழை – ஒரு ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)  கோதுமை மாவு – ஒரு கப் நெய் – தேவையான அளவு  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்  எண்ணெய் – தேவையான அளவு  நெய் – தேவையான அளவு பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்  

செய்முறை  சர்க்கரை வள்ளிகிழங்கை குக்கர் அல்லது ஸ்டீமரில் சேர்த்து வேகவைத்து தோலை நீக்கி, மசித்து வைத்துக்கொள்ளவேண்டும். 

அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள், ஓமம் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். 

அடுத்து பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கலந்துகொள்ளவேண்டும். 

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சர்க்கரை வளளிக்கிழங்கு கலவையையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் பிசைந்துகொள்ளவேண்டும். 

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்தியாக தேய்த்துக்கொள்ளவேண்டும். 

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தேய்த்த சாப்பத்திகளை இரண்டு புறத்திலும் நன்றாக பொன்னிறமாகும் வரை பிரட்டி எடுக்கவேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேப்லா தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் மற்றும் ஊறுகாய் கூட போதுமானது. 

பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!