அண்ணன் தம்பியான சூர்யாவும், கார்த்தியும் திரைத்துறையில் நடிகர்களாக தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இருப்பினும் திரைத்துறை போட்டி நிறைந்தது என்பதால், இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
By Kalyani Pandiyan S May 06, 2025
Hindustan Times Tamil
இந்த நிலையில் இந்த ஒப்பீடு குறித்து சூர்யா ரெட்ரோ படம் தொடர்பாக தன்னுடைய சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, ‘ நான் சிறந்த நடிகனெல்லாம் கிடையாது. சில சமயங்களில் என்னுடைய நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
என்னால் கார்த்தி போலெல்லாம் நடிக்க முடியாது. என்னால் மெய்யழகன் படத்தில் கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க முடியாது.
ஒரு நடிகனாக நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று நினைப்பேன்.
அந்த எண்ணத்தில்தான் ரோலக்ஸ் கேரக்டரை செய்தேன். நீண்ட நாட்களாக நான் ஒழுக்கமாக மட்டும்தான் நடிப்பேன்..
இவர் மிஸ்டர் ஒழுங்கு என்ற பிம்பமெல்லாம் உருவாகி இருந்தது. அதனை உடைப்பதற்காகத்தான் அந்தக்கேரக்டரில் நடித்தேன்’ என்று பேசினார்.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!